Sunday, July 1, 2007

பெயின்ட் பிரஷ்ஷில் என்ன வரையலாம்?

என் போன்ற மென்பொருள் ஆசாமிகள் மைக்ரோ சாஃப்டின் 'பெயின்ட் பிரெஷ்' எனும் பயன்பாடு 'திரை நகல்' (SCREEN SHOT) எடுத்து அதை தற்காலிகமாக கணினியின் நினைவகத்தில் ஏற்றி பின்னர் சிறு மாற்றங்கள் செய்து மின்-அஞ்சலில் இணைக்கவோ அல்லது வேறு ஆவணத்தில் சேர்க்கவோதான் பயன்படுத்துகிறோம். அதே பயன்பாட்டை பயன்படுத்தி அழகழகான ஓவியங்கள் வரைய முடியுமா?

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கணிப்பொறி சம்பந்தமான தமிழ் புத்தகங்கள் வாங்கி வந்து கொடுத்தவுடன் என் அப்பா மெல்ல மெல்ல சைபர் உலகத்துக்குப் பழகினார். முதலில் இணையத்தில் செய்தித்தாள் வாசிக்க ஆரம்பித்தார்.

அப்படியே பொழுது போக்காக ஆரம்பித்ததுதான் பெயின்ட் பெரஷ்ஷில் படங்கள் வரைவது. அவர் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் என்ற போதிலும், 25 வருடங்களாக அவரது ஓவியங்களை பார்த்திருந்த போதிலும் கணினி ஓவியங்கள் பிரமிப்பைத் தந்தன. அதற்கு முக்கிய காரணம் இப்படி ஒர் அடிப்படையான மென்பொருளைக் கொண்டு இந்த அளவுக்கு வரைய முடியுமா என்பதே! அவ்வோவியங்களை தற்செயலாக என் நண்பன் ஒருவன் பார்க்கப் போய் அவனுடைய விடாத தூண்டுதலினால்தான் இந்த புதிய பக்கம் ! இனி நானே பேசிக் கொண்டிருக்காமல் மாதிரிக்கு சில ஓவியங்கள்.











என்ன எப்படி இருக்கின்றன? நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?